search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தியர்கள் உயிரிழப்பு"

    நேபாளத்தில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தை அடையச் சென்ற இரு இந்தியர்கள் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
    காத்மாண்டு:

    உலகின் மிக உயர்ந்த மலை சிகரம் என்ற பெருமையை கொண்ட இமயமலையின் எவரெஸ்ட் சிகரத்தை அடைய உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் வீரர்கள் முயற்சித்து வருகின்றனர்.
     
    அவ்வகையில், மலையேற்ற குழுவினருடன் நேபாளம் சென்றிருந்த இந்தியாவை சேர்ந்த நாராயண் சிங் என்பவர் மாக்காலு மலைப்பகுதியில் சுமார் 8 ஆயிரத்து மீட்டர் உயரத்தில் இருந்து இறங்கிவரும்போது நேற்றிரவு மூச்சுத்திணறலால் உயிரிழந்தார்.

    இதேபோல், எவரெஸ்ட் சிகரத்தை அடைவதற்காக நேற்று காலை மலையேற்ற குழுவினருடன் புறப்பட்ட இந்தியாவை சேர்ந்த ரவி தாக்கர் என்பவர் தனது கூடாரத்தில் இன்று பிணமாக கிடந்தார்.

    மலைப்பாதையில் இருந்து இறங்கி வரும்போது பனிப்பாறையில் கால்பட்டு வழுக்கி விழுந்த அயர்லாந்து நாட்டை சேர்ந்த சீமஸ் சீன் லாலெஸ் என்பவரின் நிலை என்னவானது? என்று தெரியவில்லை.
    இலங்கையில் நிகழ்த்தப்பட்ட தொடர் வெடிகுண்டு தாக்குதல்களில் மேலும் 2 இந்தியர்கள் உயிரிழந்திருப்பதாக மத்திய மந்திரி சுஷ்மா தெரிவித்தார். #SriLankaAttacks #IndiansKilled #SriLankablasts
    புதுடெல்லி:

    இலங்கை தலைநகர் கொழும்புவில் நேற்று 3 கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் 4 ஓட்டல்கள் குடியிருப்பு வளாகம் என 8 இடங்களில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களில் 290 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதல்களில் அமெரிக்கா, டென்மார்க், சீனா, பாகிஸ்தான், மொராக்கோ, இந்தியா, வங்காளதேசம் ஆகிய வெளிநாடுகளை சேர்ந்த 35 பேர் உயிரிழந்ததாக செய்தி வெளியானது.



    இந்தியாவை சேர்ந்த லட்சுமி, நாராயண் சந்திரசேகர், ரமேஷ் ஆகிய 3 இந்தியர்கள் உயிரிழந்ததாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் கூறியிருந்தார். இத்தகவலை இலங்கையில் உள்ள நேஷனல் மருத்துவமனை தெரிவித்திருப்பதாக சுஷ்மா டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில் இன்று சுஷ்மா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இலங்கை குண்டுவெடிப்புகளில் மேலும் 2 இந்தியர்கள் உயிரிழந்திருப்பதாகவும், அவர்கள் பெயர் கே.ஜி.ஹனுமந்தராயப்பா, எம்.ரங்கப்பா என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், இலங்கையில் உள்ள இந்தியர்கள் கொழும்புவில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்வதற்கான +94777903082, +94112422788, +94112422789 என்ற ஹெல்ப்லைன் எண்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.

    இலங்கை வெடிகுண்டு தாக்குதல்களுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் ஆன்மீக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். #SriLankaAttacks #IndiansKilled #SriLankablasts
    வளைகுடா நாடுகளில் கடந்த நான்காண்டுகளில் 28 ஆயிரத்து 523 இந்தியர்கள் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. #28523Indians #IndiansdiedinGulf #GulfIndians
    புதுடெல்லி:

    இந்தியாவின் பல மாநிலங்களை சேர்ந்தவர்கள் வளைகுடா நாடுகளில் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் சிலர் சாலை விபத்துகளிலும், உடல் நலக்குறைவாலும், தற்கொலை செய்தும் மரணம் அடைந்துள்ளனர்.

    இவ்வாறு கடந்த நான்காண்டுகளில் வளைகுடா நாடுகளில் 28 ஆயிரத்து 523 இந்தியர்கள் உயிரிழந்ததாக பாராளுமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உறுப்பினரின் கேள்விக்கு பதிலளித்த வெளியுறவுத்துறை இணை மந்திரி வி.கே.சிங் இதற்கான புள்ளி விபரங்களை தெரிவித்தார்.


    2014-2018-க்கு இடைப்பட்ட இந்த நான்காண்டுகளில் அதிகபட்சமாக சவுதி அரேபியாவில் 12 ஆயிரத்து 828 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக ஐக்கிய அரபு அமீரகத்தில் 7,877 பேரும், குவைத்தில் 2,932 பேரும், ஓமனில் 2,564 பேரும், கத்தாரில் 1,301 பேரும், பஹ்ரைனில் 1,021 பேரும் மரணம் அடைந்துள்ளனர்.

    கடந்த 2016-ம் ஆண்டில் மட்டும்  வளைகுடா நாடுகளில் உயிரிழந்த இந்தியர்கள் எண்ணிக்கை மிக அதிகபட்சமாக 6,013 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. #28523Indians #IndiansdiedinGulf #GulfIndians
    ×